இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2022-07-17 21:52 IST

சென்னை,

இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆன்லைன் விளையாட்டினால் மிகுந்த கடன் சுமைக்கு தள்ளப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளான கோயம்புத்தூர் ஆயுதப்படை காவலர் திரு.காளிமுத்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அளிக்கிறது.

அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என நான் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

இனியும் தாமதிக்காமல், வரும் காலங்களில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு, ஆன்லைன் விளையாட்டினை உடனடியாகத் தடை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்