போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தப்பட்டது.;

Update:2023-10-14 00:58 IST

பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக சி.ஐ.டி.யு. சார்பில் கலை நிகழ்ச்சியுடன் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் கிளை செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மணிமாறன், தலைவர் கார்த்திகேயன், பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன்களை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 94 மாத டி.ஏ. நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி டி.ஏ. உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ படியாக ரூ.300 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் நிர்வாகத்தால் கொடுமைப்படுத்தப்படும் தொழிலாளர்கள் படும் இன்னல்களை கங்கை கலைக்குழுவினர் நாடக வடிவில் பிரசாரம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்