திருச்சி மாவட்டத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வை 750 பேரில் 385 பேர் எழுதவில்லை

திருச்சி மாவட்டத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வை 750 பேரில் 385 பேர் எழுதவரவில்லை

Update: 2022-09-04 19:42 GMT

மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.) மூலமாக நேற்று நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு-2 மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு-2 ஆகிய தேர்வுகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 2 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 750 பேர் இந்த தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் 365 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 385 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு மையங்களுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மத்திய அரசு பணியில் தமிழர்கள் இடம்பெற வேண்டும் என்று கூறிவரும் வேளையில், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 50 சதவீதத்துக்கும் மேல் தேர்வு எழுத வராதது வருத்தம் அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்