யு.பி.எஸ்.சி. தேர்வுகளை 486 பேர் எழுதுகிறார்கள்

யு.பி.எஸ்.சி. தேர்வுகளை 486 பேர் எழுதுகிறார்கள்.

Update: 2023-08-31 20:29 GMT

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) மூலமாக நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் ஆகிய தேர்வுகள் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் நடக்கிறது. மொத்தம் 486 பேர் எழுத உள்ளனர். இந்த போட்டித்தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள ஒரு இயங்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறைகளில் தேர்வு எழுதும் ஒவ்வொரு 24 தேர்வர்களுக்கும் 2 அறை கண்காணிப்பாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்போன் உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை. இந்த தகவலை கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்