நெல்லிக்குப்பம்வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பர் சாமி உற்சவம்

நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பர் சாமி உற்சவம் நடந்தது.;

Update: 2023-05-14 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் அப்பர் சாமி சதய உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான அப்பர் உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி மாலையில் விநாயகர் மற்றும் அப்பருக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட 27 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு இரவு சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் முருகானந்தம் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்