மகளிர் உரிமைத்தொகை திட்ட மேல்முறையீடு மனுக்கள் பதிவேற்றம்

மகளிர் உரிமைத்தொகை திட்ட மேல்முறையீடு மனுக்கள் பதிவேற்றப்பட்டதை ஆய்வு செய்யப்பட்டது.;

Update:2023-10-22 00:08 IST

கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட மேல்முறையீடு மனுக்களை தகவல் மையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் க.பரமத்தி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட மேல்முறையீடு மனு கொடுத்த பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் அட்டை ஆகியவைகளை அலுவலர்கள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொண்டு வருவதை ஆய்வு செய்தார். தொடர்ந்து க.பரமத்தி ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, அந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்