சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்!

சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-10-13 12:51 IST

சென்னை,

நியாயவிலைக் கடைகளில் யுபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இதன்படி தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் (G-Pay, Paytm) போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை நகரில் 1,500 கடைகளிலும், புறநகரில் 562 கடைகளிலும் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்