திருத்துறைபூண்டி - திருச்சி இடையே முன்பதிவு வசதி இல்லாத வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ்

Update: 2023-04-19 18:43 GMT

தஞ்சை, நீடாமங்கலம், திருவாரூர் வழியாக திருச்சி-திருத்துறைப்பூண்டி இடையே முன்பதிவு வசதி இல்லாத வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6 பெட்டிகளுடன் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருத்துறைப்பூண்டி-திருச்சி (வண்டி எண்:06717) முன்பதிவு வசதி இல்லாத வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்படும். அந்த ரெயில் திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தை இரவு 9.10 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் திருநெல்லிக்காவலுக்கு மாலை 5.58 மணிக்கும், திருவாரூரை இரவு 6.25 மணிக்கும், கொரடாச்சேரியை இரவு 6.55 மணிக்கும், நீடாமங்கலத்துக்கு இரவு 7.10 மணிக்கும், தஞ்சாவூருக்கு இரவு 7.46 மணிக்கும், பூதலூருக்கு இரவு 8.07 மணிக்கும், திருவெறும்பூருக்கு இரவு 8.23 மணிக்கும் வந்தடையும். இதுபோல் திருச்சி-திருத்துறைப்பூண்டி (வண்டி எண்:06718) முன்பதிவு வசதி இல்லாத வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் வாரந் தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும். அந்த ரெயில் திருத்துறைப்பூண்டிக்கு இரவு 10.40 மணிக்கு சென்று சேரும்.

இந்த ரெயில் திருவெறும்பூருக்கு இரவு 7.48 மணிக்கும், பூதலூருக்கு இரவு 8.07 மணிக்கும், தஞ்சாவூருக்கு இரவு 8.38 மணிக்கும், நீடாமங்கலத்துக்கு இரவு 9.18 மணிக்கும், கொரடாச்சேரியை இரவு 9.30 மணிக்கும், திருவாரூரை இரவு 9.40 மணிக்கும், திருநெல்லிக்காவலுக்கு இரவு 10.10 மணிக்கும் சென்றடையும். இந்த தகவலை தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்