தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

புதுவண்ணாரப்பேட்டையில் தேர்வுக்கு படிக்காததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-05-22 16:07 IST

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகர் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரதி. இவர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். டிபன் கடை வைத்து நடத்தி வரும் இவருக்கு எமிமால் கிரேசி (வயது 17) என்ற மகளும், எபிநேசர் (14) என்ற மகனும் உள்ளனர்.

இவர்களில் எமிமால் கிரேசி, ராயபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் -1 படித்து வந்தார். தற்போது பிளஸ் -1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் தேர்வுக்கு படிக்காமல் இருந்த மகள் எமிமால் கிரேசியை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனமுடைந்த எமிமால் கிரேசி, நேற்று காலை தாய் கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடையில் இருந்து வீட்டுக்கு வந்த ரதி, தனது மகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்