யூனியன் அலுவலகம் முற்றுகை

யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-12-29 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வடக்கு பகுதி குலசேகரபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியாகும், இந்த பகுதியில் ரேஷன் கடை ஒன்று பழுதடைந்து உள்ளது. இந்த கடையை புதுப்பிக்க வேண்டும், அத்துடன் இந்த கடையை தற்காலிகமாக அந்த பகுதியில் காலியாக உள்ள ஒரு யூனியன் பள்ளி கட்டிடத்தில் செயல்படுத்த வேண்டும், மேலும் வீடுகளுக்கான குடிநீர் முறையாக கிடைப்பதில்லை, குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். யூனியன் ஆணையாளர் கண்ணன் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன், குலசேகரபட்டி பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தண்ணீர் உடனடியாக வழங்குவதற்கும், தினசரி குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்