மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

9 ஆண்டுகளில் மீனவர்களுக்காக ரூ.38,500 கோடியை பிரதமர் ேமாடி ஒதுக்கீடு செய்துள்ளார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.;

Update: 2023-10-07 20:13 GMT

9 ஆண்டுகளில் மீனவர்களுக்காக ரூ.38,500 கோடியை பிரதமர் ேமாடி ஒதுக்கீடு செய்துள்ளார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

மீனவர்களிடம் குறைகள் கேட்டனர்

மத்திய அரசின் சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் ஆகியோர் மீனவர்களிடம் குறைகள் கேட்டனர்.

பின்னர் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில், விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன் அட்டை போல் மீனவர்களுக்கும் அட்டை வழங்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ரூ.10 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, ரூ.3,700 கோடி மட்டுமே மீன்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.36 ஆயிரம் கோடி மீன்வளத்துறைக்கு செலவழிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மீன்பிடி நிவாரணத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இறால் உற்பத்தி ஏற்றுமதியில் முதலிடம்

அதனை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் முருகன் ே்பசுகையில், பிரதமர் மோடி மீனவர்களின் பிரச்சினைகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மாவட்ட மீனவர்களுக்காக ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை ரூ.1 கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மீனவர்களுக்காக ரூ.38,500 கோடியை பிரதமர் மோடி ஓதுக்கீடு செய்தார்.

மீன்வளத்துறை மூலம் ஏற்றுமதியில், உலகளவில் நமது நாடு 4-வது இடத்தில் உள்ளது. இறால் உற்பத்தி ஏற்றுமதியில் உலகளவில் நமது நாடு முதலிடத்தில் உள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பாக உடனடியாக மீனவர்கள் பிரச்சினை வெளியுறவு துறை மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.

மீனவரின் நண்பராக பிரதமர் மோடி செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்றார்.

இதில் மீன்வளத்துறை இணை செயலர் நீத்துக்குமாரி, கலெக்டர் தீபக் ஜேக்கப், மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, தஞ்சாவூர் மாவட்ட மீன்வள உதவி இயக்குனர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் மீனவர்கள் சார்பில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், பண்ணவயல் இளங்கோ மற்றும் மாவட்ட, ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்துகொண்டனர்.

ஆய்வு

பின்னர் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்ே்பாது மீனவர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். மீன்பிடி தடை காலத்தில் அரசால் வழங்கப்படும் ரூ.5ஆயிரத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். கடற்கரை வாய்க்கால்களை தூர்வாரி தர வேண்டும் என அமைச்சர்களிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக அதிராம்பட்டினம் பஸ் நிலையம் அருகே பா.ஜ.க. கொடியை மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா ஏற்றி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்