தேவையான வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படும்- ஒன்றியக்குழு தலைவர்
36 ஊராட்சிகளிலும் தேவையான வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படும் என ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் கூறினார்.;
36 ஊராட்சிகளிலும் தேவையான வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படும் என ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் ராஜூ, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உதவி அலுவலர் ரமேஷ் தீர்மானங்களை படித்தார். பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-
ஜெகநாதன் (அ.தி.மு.க.):-
செம்போடையில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற வழிவகை செய்யாவிடில் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
வைத்தியநாதன் (தி.மு.க.):- தாணிக்கோட்டம் ஊராட்சி வானங்கோட்டகம் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
ராஜசேகரன் (அ.தி.மு.க.):- கடி நெல்வயலில் 4 ஆண்டுகளாகியும் தேவையான பணிகளை செய்ய முடியவில்லை. அறுவடை பணிகள் முடிந்த நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
வளர்ச்சி பணிகள்
கண்ணகி (தி.மு.க.):- ஆயக்காரன்புலம் ஊராட்சி பகுதியில் மின்மயானம் அமைத்து தரவேண்டும்.
கமலா அன்பழகன் (தலைவர்):- ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசிடமிருந்து வரும் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் தேவையான அனைத்து வளர்ச்சி பணிகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் ஒன்றிய என்ஜினீயர் உள்பட அலுவலர்களும், பிற துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். முன்னதாக ஆணையர் ராஜூ வரவேற்றார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை நன்றி கூறினார்.