ஒன்றியக்குழு கூட்டம்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சிந்து முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகளை உடனடியாக செய்து தருமாறு அந்த அந்த துறை அதிகாரிகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் ரேகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், சத்திய சங்கர், உதவி பொறியாளர்கள் ஜெயா, தீபக்ராஜ் மற்றும் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.