மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று விருதுநகர் வருகை

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று விருதுநகர் வருகிறார்.;

Update: 2023-11-19 02:59 GMT

விருதுநகர்,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணி அளவில் விருதுநகர் மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் 1,297 சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 71 லட்சத்து 50 கடனுதவி வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார். மேலும் 10 மாணவர்களுக்கு சந்திரயான் விண்கலம் மாடல்களை வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் நிதித்துறை செயலர் மற்றும் வங்கி அதிகாரிகள், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விருதுநகர் வருகை தரும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு மருத்துவக்கல்லூரி முன்பு விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் பாண்டுரெங்கன் தலைமையில் பா.ஜனதாவினர் வரவேற்பு அளிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்