அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆசிரியர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆசிரியர் பலியானார்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திபட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 42). இவர் பாம்பாட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
நான்கு வழிச்சாலையில் ஒரு கோவில் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் பாண்டியன் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ஆசிரியர் பாண்டியன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீசார், பாண்டியனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் பாண்டியனின் சாவுக்கு காரணமான வாகனத்தையும், அதை ஓட்டிச் சென்றவரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.