அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் - கண்டியூர் சாலையில் பசுபதிகோவில் கல்லறையின் எதிர்புறம் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துகிடந்தார். அவர் கருப்பு நிற கட்டம் போட்ட வெள்ளை அரைக்கை சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்தார். இது குறித்து பசுபதிகோவில் கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.