அடையாளம் தெரியாத ஆண் பிணம்

வணணாங்குளம் கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.

Update: 2022-06-08 13:20 GMT

கண்ணமங்கலம்

திருவண்ணாமலை-வேலூர் நெடுஞ்சாலையில் வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் பின்பக்கமுள்ள புதரில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அந்தப பகுதியைச சேர்ந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலர் துரைராஜுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

பிணமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என விவரம் தெரியவில்லை. பிணமாக கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொணடாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிணமாக கிடந்தவர் வண்ணாங்குளம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்து வந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்