அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு
கிணத்துக்கடவு அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டது;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டுபுதூரில் உள்ள ஒரு தனியார் மண்டபம் முன்பு அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பாலதண்டாயுதபாணிக்கு தகவல் கிடைத்தது. அவர், கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. எனினும் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிணத்தை அனுப்பி வைத்தனர். அவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.