கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 12 பேர் கைது
கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி இ. எஸ். ஐ. மருத்துவ மனை முன்பு அம்பேத்கர், பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார். இதற்கு போலீஸ் அனுமதிபெற வில்லை என்று கூறி கிழக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தார். இதை தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நகரச் செயலாளர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.