சர்வர் பழுதால் கட்டணம் வசூலிக்க முடியாத நிலை

விருதுநகர் மின்வாரிய வசூல் மையத்தில் சர்வர் பழுதால் கட்டணம் வசூலிக்க முடியாத நிலை உள்ளதால் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-03-24 19:02 GMT


விருதுநகர் மின்வாரிய வசூல் மையத்தில் சர்வர் பழுதால் கட்டணம் வசூலிக்க முடியாத நிலை உள்ளதால் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மின் கட்டணம்

தமிழ்நாடு மின்வாரியம் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை கணக்கிட்டு கணக்கிட்ட நாள் முதல் கட்டணம் செலுத்த 20 நாள் அவகாசம் வழங்கும் நிலை நடைமுறையில் உள்ளது. விருதுநகரில் நகரின் மேற்கு பகுதியில் மின் கட்டணம் வசூலிக்கும் மையம் உள்ளது. இ்ந்தநிலையில் மின் கட்டணம் வசூலிக்கும் மையத்தில் மின்தடை, சர்வர் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் மின் கட்டணம் வசூலிக்க இயலாத நிலை ஏற்படுகிறது.

கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாளன்று கட்டணம் செலுத்துபவர்கள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் மறுநாள் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் வசூல் மையத்தில் உள்ள அலுவலர்கள், மறுநாள் வந்து கட்டுமாறும் கடைசி நாள் வரை ஏன் காத்திருக்கிறீர்கள் என்றும் மின்நுகர்வோரிடம் பிரச்சினை செய்யும் நிலை தொடர்கிறது.

முன்னேற்பாடு

இதுபற்றி ஏற்கனவே மின் பகிர்மான வட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்றுமுன்தினம் கட்டண வசூல் மையத்தில் சர்வர் பழுது காரணமாக மின் கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே மின் பகிர்மானவட்ட உயர் அதிகாரிகள் மின் கட்டணம் வசூல் மையத்தில் மின் தடை காரணமாகவோ அல்லது சர்வர் பழுது காரணமாகவோ கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டால் கடைசி நாளன்று கட்டணம் செலுத்த வருபவர்களிடம் மறுநாள் அபராதம் இல்லாமல் கட்டணம் வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வசூல் மையத்தில் பணிகள் தடையில்லாமல் இருக்க உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்ய வேண்டியது அவசியமாகும். 

Tags:    

மேலும் செய்திகள்