உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை

உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.;

Update: 2022-10-13 18:45 GMT

உடன்குடி:

திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி, பழனியப்பபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருகிறது. எனவே, நாளை காலை 8மணி முதல் மாலை 5மணி வரை சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, மெஞ்ஞானபுரம், அனைத்தலை, இராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், பழனியப்பபுரம் அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி, உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, நைனாபத்து, பிச்சிவிளை, வெள்ளாளன்விளை, குருநாதபுரம், சீருடையார்புரம், செட்டியாபத்து, நாலுமூலைக்கிணறு, தண்டுபத்து, சீயோன்நகர், நா.முத்தையாபுரம், தாண்டவன்காடு, பரமன்குறிச்சி, சிவலுர், புதுமனை, வேதகோட்டைவிளை, கொட்டங்காடு, ஞானியார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்