உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றுதிருச்சி தெற்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-05-30 19:49 GMT

மலைக்கோட்டை, மே.31-

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வி.என்.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற 3-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை மாவட்ட அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இனிகோ. இருதயராஜ் எம்.எல்.ஏ., மண்டலகுழு தலைவர் மதிவாணன் மற்றும் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய குழு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்