இருசக்கர வாகனங்கள் மாயம்

இரு சக்கர வாகனங்கள் மாயமானது.

Update: 2023-04-19 19:28 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள மம்சாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்துரு (வயது 21). இவர் தனக்கு சொந்தமான இருச்சக்கர வாகனத்தை வீட்டின் அருகில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் பார்க்கும் போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் சிவகாசி 52 வீட்டு காலனியை சேர்ந்த காஜா ரகமத்துல்லா (35) என்பவர் அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள ரத்தினவிலாஸ் பஸ் நிறுத்தம் அருகில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்