இருசக்கர வாகனங்கள் மோதல்; பால் வியாபாரி உள்பட 2 பேர் பலி

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பால் வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்;

Update: 2023-07-20 18:45 GMT

ராஜபாளையம்.

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பால் வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இருசக்கர வாகனங்கள் மோதல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோலைசேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 32). பால் வியாபாரி. இவர் இருசக்கர வாகனத்தில் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் சேத்தூர் பகுதியை சேர்ந்த சிவராஜன் (31) என்பவர் வந்தார். இவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் 2 பேர் வந்த 2 வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

பரிதாப சாவு

இந்த விபத்தில்் படுகாயம் அடைந்த சிவராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த பால் வியாபாரி முருகனை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பலியான 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த விபத்து குறித்து சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்