மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதி விபத்து - 2 பேர் காயம்
நாகை அருகே 2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் -கச்சனம் பிரதான சாலையில் கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகே கச்சனம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சேகர். இவர் தனது மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வேகமாக மோட்டர் சைக்கிளில் வந்த இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார்.
மீட்கப்பட்ட அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பாலாஜி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்