நாட்டு வெடி தயாரித்த இருவர் உடல் சிதறி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நாட்டு வெடி தயாரித்த 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நாட்டு வெடி தயாரித்த இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சேத்தூர் ஊராட்சி, மங்கம்மா சாலை அருகே, தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் ராஜா (வயது 28), கருப்பையா (வயது 25) ஆகிய இருவர் பேப்பர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென நாட்டு வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்ததில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரின் சடலமும் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டு தயாரித்தது பற்றி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.