தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

செஞ்சி, திண்டிவனம் பகுதியில் நடந்த தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

Update: 2022-09-19 18:45 GMT

செஞ்சி

பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர ராஜ்வன்சி மகன் ராகுல் ராஜ் வன்சி(வயது 32). சென்னையில் வியாபாரம் செய்து வரும் இவர் சம்பவத்துன்று தனது நண்பரின் மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். செஞ்சி அருகே உள்ள வல்லம் தொண்டியாற்று பாலத்தில் வந்த போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் தடுப்புசுவர் மீது ராகுல்ராஜ் வன்சி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் விஜய்(வயது 24). இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி வந்துகொண்டிருந்தார். திண்டிவனம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கல்லூரி சாலை சந்திப்பில் உள்ள மரத்தில் விஜய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக செங்கல்பட்டில் உள்ள ஆஸ்பத்திாியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி விஜய் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்