லாட்டரி சீட்டு விற்ற அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணப்பாறை:
ஆசிரியர்
மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் ஒருவர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக மணப்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஜான்வில்லியம்(வயது 46) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர் கலிங்கபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜான் வில்லியம்மை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.54 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
கைது
இதேேபால் வையம்பட்டியை அடுத்த கல்பட்டி சத்திரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சின்னாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த முகமது காசீம்(58) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 100 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.