மஞ்சள் விலை கட்டுப்பாட்டில் உள்ளது
மஞ்சள் விலை கட்டுப்பாட்டில் உள்ளது என வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.;
ஏற்றுமதிக்கான தேவை அதிகரிப்பால் மஞ்சள் விலை கடந்தாண்டை விட குறைந்துள்ள போதிலும் மேலும் குறைந்து விடாமல் கட்டுப்பாட்டில் உள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
அதிகரிப்பு
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
விரலி மற்றும் முட்டா மஞ்சள் உள்ளூர் சந்தையில் விற்பனை மந்தமாக இருந்த போதிலும் இவற்றிற்கான ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளதால் விலை கடந்த ஆண்டை விட குறைந்துள்ள போதிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்தாண்டு விரலி மஞ்சள் குவிண்டால் ரூ. 7,790 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 6,183 ஆக உள்ளது.
இதேபோன்று முட்டா மஞ்சள் கடந்த ஆண்டு குவிண்டால் ரூ.6,599 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 5,413 ஆக உள்ளது. கடந்த ஆண்டு மஞ்சள் ஏற்றுமதி ஒரு லட்சம் டன்னாக இருந்த நிலையில் தற்போது 1.12 லட்சம் டன் ஆக அதிகரித்து உள்ளது.
சாகுபடி
இதேபோன்று மஞ்சள் சாகுபடியும் கடந்த ஆண்டை விட தற்போது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 11.03 லட்சம் டன்னாக இருந்த மஞ்சள் உற்பத்தி தற்போது 13.3 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. தற்போது மஞ்சள் வரத்து வரும் ஜூன் மாதம் வரை எதிர்பார்க்கப்படும் நிலையில் மஞ்சள் குவிண்டால் ரூ.5,500 வரை குறைய வாய்ப்புள்ளது.
ஆனால் ஏற்றுமதி தேவை அதிகரிப்பால் மஞ்சள் விலை மேலும் குறையாமல் கட்டுப்பாட்டில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் மஞ்சள் சாகுபடி பாதித்துள்ள நிலையில் கர்நாடக மஞ்சள் தேவைக்கு தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.