தும்பிவாடி மாரியம்மன் கோவில் திருவிழா

தும்பிவாடி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-04-28 19:23 GMT

சின்னதாராபுரம் அருகே உள்ள தும்பிவாடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 9-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அந்தநாளில் இருந்து தினமும் கம்பத்திற்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வணங்கி வந்தனர். 23-ந்தேதி மாலையில் வடிசோறு, மாவிளக்கு பூஜையுடன் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 24-ந்தேதி எட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

தொடர்ந்து கொடுமுடி காவிரியில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை மாரியம்மனுக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்தனர். 25-ந்தேதி கிடா வெட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மொட்டை அடித்தும், அக்னி சட்டி எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் தும்பிவாடி, ஆனூர், சேங்கலாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் 4 சக்கர வாகனங்களில் மாரியம்மனை அலங்கரித்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 26-ந்தேதி கம்பத்தை ஊர் கிணற்றில் கொண்டு சென்று விட்டனர். அதனை தொடர்ந்து மஞ்சள்நீர் விளையாட்டு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்