மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த டியூஷன் ஆசிரியர்

வாலாஜாபேட்டையில் டியூஷனுக்கு வந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-07-11 17:22 GMT

வாலாஜாபேட்டையில் டியூஷனுக்கு வந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டியூஷன் ஆசிரியர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்

தோல் தொழிற்சாலை ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். மாலை நேரத்தில் வாலாஜாவில் செயல்பட்டு வரும் தனியார் டியூஷன் சென்டரில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு வேதியியல் பாடம் கற்பித்து வந்துள்ளார்.

அப்போது தன்னிடம் படிக்க வந்த 17 வயது சிறுமியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை

கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க பெற்றோர்கள், சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதில் நீண்ட நேரம் சிறுமி பேசிவந்துள்ளார்.

இதனால் சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்த பெற்றோர், அவரிடமிருந்த செல்போனை வாங்கிக்கொண்டு, விசாரித்துள்ளனர்.

அப்போது ஆசிரியர் செந்தில்நாதனால் பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து தெரிவித்துள்ளார்.

இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து இது தொடர்பாக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் கொடுத்தார்.

அதன் பேரில் ஆசிரியர் செந்தில்நாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்