குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் கண்டறியும் கருவி அமைப்பு

குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் கண்டறியும் கருவி அமைப்பு;

Update: 2023-07-04 19:00 GMT

குன்னூர்

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள நோயாளிகள் காசநோய் கண்டறிவதற்காக தனியார் மருத்துவமனைகளில் சென்று பரிசோதனை செய்து வந்தனர். நோயாளிகள் இதற்காக கட்டணமாக 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி பரிசோதனை செய்தனர். இந்த நிலையில் இலவசமாக காசநோய் கண்டறிய தனியார் அமைப்பு உதவியுடன் ஜெர்மன் தொழில் நுட்பம் வாய்ந்த அதிநவீன கேபினட் எந்திரம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் காசநோய் குறித்து 2 மணி நேரத்தில் மிகத் துல்லியமாக கண்டறியலாம்.

காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. நேற்று முதல் இந்த எந்திரம் குன்னூர் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஏற்கனவே ஊட்டி மற்றும் கூடலூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த எந்திரம் பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது குன்னூரிலும் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் விசுவநாதன் மற்றும் டாக்டர் ரமேஷ் முதன்மை ஆய்வக நுட்புனர் செந்தாமரை உள்பட பலர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்