காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

நீடாமங்கலம் அருகே காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

Update: 2023-07-24 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் ஊராட்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் தையல்நாயகி கிருஷ்ணமேனன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பொது மக்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் அனைவருக்கும் இலவசமாக எக்ஸ்ரே எடுக்கப்படும் என இப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் எடுத்து கூறப்பட்டது. முகாமில்

சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் மாதவன், சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார் மற்றும் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்