குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.;

Update: 2023-08-23 15:25 GMT

குடிமங்கலம்

குடிமங்கலம் அருகே திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

திருமூர்த்தி கூட்டு குடிநீர்

குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட 23 ஊராட்சிகளில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறது. திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டம் புவிஈர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டையம்பாளையம், புக்குளம், இலுப்பநகரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீருந்து நிலையங்கள் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பொட்டையம்பாளையம் அருகே திருமூர்த்தி கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது மேலும் அப்பகுதியில் குடிநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

சீரமைக்க வேண்டும்

திருமூர்த்தி கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் பெருமளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே திருமூர்த்தி கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்