சுனாமி நினைவுத்தூணில் கலெக்டர் லலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி

சுனாமி நினைவுத்தூணில் கலெக்டர் லலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.;

Update: 2022-12-26 18:45 GMT

தமிழகத்தை சுனாமி பேரலைகள் தாக்கியதன் 18-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பூம்புகாரில் உள்ள சுனாமி நினைவுத்தூணில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், காவேரி பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் மதுமிதா ரவி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், உழவன் நண்பர் குழு தலைவர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்