உத்திரமேரூரில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து

உத்திரமேரூரில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து டிரைவர் படுகாயமடைந்தார்.;

Update: 2023-05-04 08:55 GMT

உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு சென்னை துறைமுகத்திலிருந்து அடுப்பு கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று உத்திரமேரூர்- வந்தவாசி சாலையில் நேற்று சென்றுகொண்டு இருந்தது. லோகேஸ்வரன் (வயது 40) என்பவர் அந்த லாரியை ஓட்டிச்சென்றார். உத்திரமேரூர் அங்காளம்மன் கோவில் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்து சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் மீது லாரி மோதியது. இதனால் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லோகேஸ்வரன் படுகாயமடைந்தார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த டிரைவர் லோகேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் உத்திரமேரூர்-வந்தவாசி சாலை இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்