மொபட் மீது லாரி மோதல்; பெண் பலி

ஆலங்குடி அருகே மொபட் மீது லாரி மோதியதில் பெண் பலியானார். கணவர் படுகாயமடைந்தார்.;

Update: 2023-07-05 18:40 GMT

மொபட் மீது லாரி மோதல்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பெருஞ்சுனை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவரது மனைவி முத்துலட்சுமி (58). இவர்கள் இருவரும் மொபட்டில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உறவினரை பார்க்க சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆலங்குடி கண்டங்காரம்பட்டி கிராமம் அருகே தஞ்சாவூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 2 பேரும் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டத்தில் படுகாயமடைந்தனர்.

பெண் பலி

மேலும் சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த ராமசாமியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி விடுதி ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்