லாரி மோதி டிரைவர் பலி

விருதுநகர் அருகே லாரி மோதி டிரைவர் பலியானார்.;

Update: 2022-06-25 18:50 GMT

விருதுநகர் அருகே உள்ள பெரியவாடி ஊரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 43). டிராக்டர் டிரைவரான இவர் ஒப்பந்த அடிப்படையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தனியார் நிறுவன வளாகத்தில் மாரிமுத்து டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி, டிராக்டர் மீது மோதியதில் அவர் கீழே தவறி விழுந்தார். அவர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே மாரிமுத்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாரிமுத்துவின் மனைவி முருகேஸ்வரி (37) அளித்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் லாரி டிரைவர் காந்திநகரை சேர்ந்த சங்கர் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்