கம்மாபுரம் அருகேபஸ் மீது லாரி மோதல்17 பயணிகள் படுகாயம்

கம்மாபுரம் அருகே பஸ் மீது லாரி மோதியதில் 17 பயணிகள் படுகாயடைந்தனர்.;

Update: 2023-05-30 18:45 GMT


கம்மாபுரம், 

சேத்தியாதோப்பில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் மாதா கோவில் பஸ் நிறுத்ததில் வந்த போது, அந்தவழியாக குருடாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி வந்து கொண்டருந்தது.

கோபாலபுரம் மாதா கோவில் பஸ்நிறுத்தத்தில் அரசு பஸ் டிரைவர், பயணிகளை இறக்கி விட்டுக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த டேங்கர் லாரி, அரசு பஸ் மீது மோதியது. மேலும், மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த வீட்டு தோட்டத்துக்குள் புகுந்தது.

17 பேர் காயம்

இதில், பஸ்ஸில் பயணம் செய்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்த இன்பத்தமிழன் (வயது 14), மணலூர் பிரதீபா (20), பாலக்கொள்ளை மனோஜ் குமார் (29), கம்மாபுரம் ராமானுஜம் (65), குப்பநத்தம் நல்லூர் கலையரசி (57), விருத்தாசலம் ராதா (54), சென்னை சங்கர் மனைவி சகுந்தலா (31), மகள் தர்ஷினி (7), சின்னகோட்டுமுளை காசிநாதன் (63), தேவங்குடி தனலட்சுமி (60), பொன்னேரி ஜெயஸ்ரீ (30), காணாது கண்டான் சதீஷ் (19), விளக்கப்படி ராஜவேல் (48), ஆதனூர் வீரமணி (44), நாகமந்தல் மலர்கொடி (45) உள்ளிட்ட 17 பேர் படுக்காயத்துடன் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இதற்கிடையே, விபத்து நேர்ந்த இடத்துக்கு போலீசார் உடனடியாக வரவில்லை. இதை கண்டித்து, அந்த பகுதி மக்கள் சாலை மறியலல் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடம் நடந்த மறியலால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்