லாரி-கார் மோதல் சென்னை தம்பதி படுகாயம்
திண்டிவனம் அருகே லாரி-கார் மோதல் சென்னை தம்பதி படுகாயம்;
திண்டிவனம்
சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கரன்(வயது 64). இவர் தனது மனைவி லட்சுமி(62) என்பவருடன் சென்னையில் இருந்து காரில் காரைக்குடிக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சாரம் மெயின் ரோட்டில் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே வந்த லாரி மீது கார் மோதியதில் அப்பளம் போல நொறுங்கியது. இதில் படுகாயம் அடைந்த தம்பதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.