பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா

பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2023-04-05 20:15 GMT

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. இதற்கு கல்லூரியின் முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வர் விஜயலெட்சுமி கலந்து கொண்டு நுண்கலை போட்டிகளில் வெற்றிபெற்ற 120 மாணவ-மாணவிகளுக்கும், பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற 17 மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார். கடந்த 1-ந்தேதி நடைபெற்ற கல்லூரியின் முத்தமிழ் விழாவில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியின் முதல்வர் பானுமதி இலக்கியத்தில் அறம் என்ற தலைப்பில் பேசி, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும் அன்றைய தினம் மதியம் நடந்த கல்லூரி விளையாட்டு விழாவில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் கலந்து கொண்டு பேசி விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 151 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்

Tags:    

மேலும் செய்திகள்