மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா

வாசுதேவநல்லூர் அருகே மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.

Update: 2023-09-12 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் இயங்கி வரும் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், கடந்த 2 நாட்கள் முப்பெரும் விழாக்கள் நடைபெற்றது. திறன் வளர்மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக சென்னை ஐ.ஐ.டி. மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இணைந்து தேர்ந்தெடுத்த 16 சிறந்த கல்லூரிகளில் வியாசா கல்லூரியும் ஒன்று. இதன்மூலம் வணிகவியல் மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக 6-12 மாதங்கள் வகுப்புகள் நடத்தி, தேர்வு வைத்து அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மாணவிகள் சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறுவர்.

'தமிழ் இலக்கியங்களில் உயிரியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு தமிழ்த்துறையினரால் நடத்தப்பட்டது. மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி பேராசிரியை தமயந்தி ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிறுவனர் வெள்ளத்துரைப்பாண்டியன், துணை தலைவர் பிரகாசவல்லி சுந்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பேராசிரியைகளின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கோலம், சமையல், கைவினைப்பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நிர்வாக இயக்குனர் வெள்ளத்தாய், முதல்வர் ஈஸ்வரன், தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்