திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து

திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Update: 2023-03-13 17:55 GMT

திருவனந்தபுரம் கோட்டத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருவனந்தபுரம் ரெயிவே வழிதடத்தில் இயங்கும் ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண் 22627 திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 6 நாட்கள் நெல்லையில் இருந்து திருவனந்தபுரம் வரை இயங்காது. இதேபோல் மறுமார்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்படும் வண்டி எண் 22628 இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மேற்கண்ட தேதியில் திருவனந்தபுரம்- நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்