உலக வலுதூக்கும் போட்டிக்கு திருச்சி மாணவி தேர்வு

உலக வலுதூக்கும் போட்டிக்கு திருச்சி மாணவி தேர்வு செய்யபப்பட்டுள்ளார்.

Update: 2023-07-04 19:52 GMT

தேசிய பெண்கள் வலு தூக்கும் போட்டி நெல்லையில் நடந்தது. இதில் திருச்சி ஜமால்முகமது கல்லூரி மாணவி ராஜேஸ்வரி 69 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவர் ஸ்குவாட்டில் 172.5 கிலோவும், பென்ச் பிரசில் 65 கிலோவும், டெட்லிப்டில் 187.5 கிலோ என மொத்தம் 425 கிலோ எடை தூக்கி இந்த பதக்கத்தை வென்றார். இந்தபோட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரியா வெள்ளிப்பதக்கத்தையும், கேரளாவை சேர்ந்த ராகத்அல்கா வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற ராஜேஸ்வரி அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ருமேனியா நாட்டில் நடைபெறும் உலக வலுதூக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக வலு தூக்கும் போட்டியில் விளையாட தேர்வாகி உள்ள ராஜேஸ்வரியை கல்லூரி நிர்வாக குழுவின் செயலர் காஜாநஜிமுதீன், பொருளாளர் ஜமால்முகமது, முதல்வர் இஸ்மாயில் முகைதீன், கவுரவ இயக்குனர் அப்துல்காதர்நிகால் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஷாயின்ஷா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்