திருச்சி கொட்டப்பட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி

திருச்சி கொட்டப்பட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது.

Update: 2022-09-09 14:20 GMT

திருச்சி கொட்டப்பட்டில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 21-ம் ஆண்டு திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து தேர் மந்திரிக்கப்பட்டு பவனி தொடங்கியது. தேர் கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி தெருக்களில் ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. பின்னர் கொடி இறக்கப்பட்டு, நற்கருணை ஆராதனையோடு விழா முடிவடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை பால் ஜெயக்குமார் மற்றும் பங்குப்பேரவையினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்