திருச்சி-கரூர் ரெயில் 2 நாட்கள் ரத்து
திருச்சி-கரூர் ரெயில் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.;
சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கரூரில் இருந்து தினமும் மாலை 3.55 மணிக்கு திருச்சிக்கு வரும் கரூர்-திருச்சி (எண்:06882) முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் இன்றும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து தினமும் மாலை 6.20 மணிக்கு கரூருக்கு புறப்படும் திருச்சி-கரூர் (எண்:06123) முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் இன்றும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது என்று திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.