திருச்சி அரசு மருத்துவமனை ஊழியர் இடமாற்றம்

லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2022-08-19 16:36 GMT

லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

ரூ.800 லஞ்சம்

திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் உஸ்மான். இவருடைய மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து வார்டுக்கு அழைத்து வந்தபோது, மருத்துவமனை ஊழியர் ஒருவர் ரூ.800 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த த.மு.மு.க.வினர் திருச்சிஅரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். பின்னர் உஸ்மானுடன் சென்று டீன் நேருவிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்று விசாரணை நடத்திய டீன் நேரு, சம்பந்தப்பட்ட ஊழியரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

பரபரப்பு

மேலும், இது குறித்து டீன் நேரு கூறுகையில், "சம்பந்தப்பட்ட ஊழியர் லஞ்சம் பெற்றாரா? இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தி தான் துறைரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார். இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்