திருச்சி: பாஸ்ட்டேக்கில் பணம் இல்லாததால் சுங்கச்சாவடியில் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து

பேருந்தில் சென்ற 25-க்கும் மேற்பட்ட பயணிகள், வேறு பேருந்துகளில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.;

Update: 2022-12-29 14:56 GMT

திருச்சி,

திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கிச் சென்ற அரசு பேருந்து துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து சென்ற போது, அந்த அரசு பேருந்துக்கான பாஸ்ட்டேக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது. இதனால் சுங்கச்சாவடி அதிகாரிகள் பேருந்தை அங்கேயே நிறுத்தினர்.

இதனால் அந்த பேருந்தில் சென்ற 25-க்கும் மேற்பட்ட பயணிகள், வேறு பேருந்துகளில் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உத்தரவு கிடைக்காததால் அரசு பேருந்து அங்கேயே சுமார் 3 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கும்பகோணம் கோட்ட அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வந்த பிறகு நடத்துனர் சுங்கக் கட்டணத்தை செலுத்தினார். இதையடுத்து அந்த அரசு பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. 

Tags:    

மேலும் செய்திகள்