கீழவெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி
காரைக்குடியில் கீழவெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ஏ.ராஜா தலைமையில் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடியில் கீழவெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ஏ.ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி மாநில துணை பொதுச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சாத்தையா, திராவிட கழக தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிட மணி, திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் பிராட்லா, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை செயலாளர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சிவாஜி காந்தி, மாதர் சங்க மாவட்ட தலைவர் மஞ்சுளா, மாவட்ட குழு உறுப்பினர் சரவணன் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், சுகாதார தொழிலாளர் சங்க தலைவர் முருகன், செயலாளர் ராமராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.