'நீட்' தேர்வில் பழங்குடியினர் நரிக்குறவர் இன மாணவி தேர்ச்சி
'நீட்' தேர்வில் பழங்குடியினர் நரிக்குறவர் இன மாணவி தேர்ச்சி பெற்றனர்.;
பெரம்பலூர்:
மருத்துவ படிப்பிற்கான இந்த ஆண்டிற்கான 'நீட்' தேர்வு முடிவுகள் கடந்த 13-ந்தேதி வெளியானது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தில் உள்ள பழங்குடியினர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த சுப்பிரமணியனின் மகள் கோகிலா, 'நீட்' தேர்வில் 161 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தமிழகத்திலேயே 'நீட்' தேர்வில் பழங்குடியினர் நரிக்குறவர் இனத்தில் முதன் முதலில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.